திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 340 மனுக்கள் பெறல்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 340 மனுக்கள் பெறப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-06 15:53 GMT
குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது . இக்கூட்டத்தில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை ,ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 340 மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.
மனுக்களை விசாரித்து மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களை ஒப்படைத்து உரிய காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும்மாறு உத்தரவிட்டார்.