36 விநாயகர் சிலைகள் கரைப்பு
மதுரை திருப்பரங்குன்றத்தில் 36 விநாயகர் சிலைகள் கண்மாயில் கரைக்கப்பட்டன;
மதுரை திருப்பரங்குன்றத்தில் நேற்று (ஆக.30) மாலை இந்து முன்னணி சார்பில் 36 விநாயகர் சிலைகள் 16 கால் மண்டபம் பகுதியிலிருந்து போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு நகர முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று சிவந்திகுளம் கண்மாயில் கரைக்கப்பட்டது.வஜ்ரா வாகனம் மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.