பணத்தகராறில் இருதரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு

ரகளையில் ஈடுபட்டு ருவரை ஒருவர் தாக்கி கொண்ட இருதரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு.;

Update: 2024-02-25 13:10 GMT

வழக்கு

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள வேடுகாத்தான்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 39). இவர் பெருமாம்பட்டி கணவாய் காட்டில் உள்ள பாலன் (35) என்பவரின் வெள்ளி பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் பாலனிடம் முன் பணமாக மாரியப்பன் ரூ.90 ஆயிரம் பெற்றதாகவும், கடந்த 2 நாட்களாக அவர் வேலைக்கு செல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பாலன், மாரியப்பனிடம் பட்டறைக்கு ஏன் வரவில்லை என கேட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாரியப்பன் நண்பர்களுடன் வேடகாத்தான்பட்டி பஸ் நிறுத்தம் அருகே பாலன் தரப்பினரை தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் காயம் அடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் இருதரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News