தடை செய்யப்பட்ட 3701 கிலோ நெகிழி பறிமுதல்
பெருந்துறை அருகே பள்ளபாளையத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் தயாரித்து விற்பனை செய்த தொழிற்சாலையில் இருந்து 3701 கிலோ நெகிழி பொருட்களை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Update: 2024-02-11 04:56 GMT
ஈரோடு மாவட்டம் பள்ளபாளையத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிகளை தயாரித்து சேமித்து வைத்து, விற்பனை செய்து வருவதாகவும் ,இரஙு நேழங்களில் அதிக சத்ததுடன் இயங்கி வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உத்தரவின் பேரில் பெருந்துறை மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் கடந்த மூன்று மாதங்களாக உரிய அனுமதி பெறாமலும் , மறைமுக செயல்பட்டதும் தடை செய்யப்பட்ட நெகிழியை தயாரிப்பதும் தெரியவந்த்து. இதனைத்தொடர்ந்து அத்தொழிற்சாலையிலிருந்த 3701 கிலோ நெகிழியை பறிமுதல் செய்த அதிகாரிகள் , ரூ 25000 அபராதம் விதித்தனர்.மேலும் நெகிழி தயாரித்த தயாரித்த தொழிற்சாலை தொடர்ந்து செயல்பட தடை விதித்தனர்.