தேனி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்திய 3794 பேர் கைது
தேனி மாவட்டத்தில் கடந்த 6 மாதத்தில் ரேஷன் அரிசி கடத்திய 3794 பேர் கைது செய்யப்பட்டு, 594 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2024-03-15 07:48 GMT
தேனி மாவட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு விற்பனை காவல்துறையினரால் கடந்த ஆறு மாதங்களில் தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 3660 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அது தொடர்பாக 3794 பேரை கைது செய்து 598 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் 1800-599-5950 உன்னில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.