38 வருடங்கள் கழித்து கோவில் கும்பாபிஷேகம்

9:30 மணிக்கு மேல் யாக சாலையில் இருந்து கும்பங்கள் புறப்பாடு நடைபெற்று காலை 10 மணிக்கு மேல் விமான கோபுரம் மஹா கும்பாபிஷேகம் மற்றும் மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது அதனை தொடர்ந்து அலங்கார பூஜை மற்றும் தீபாரதணை நடைற்றது;

Update: 2025-06-06 10:06 GMT
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஒகளூர் கிராமத்தில் 1300 வருடம் பயமை வாய்ந்த அருள் பாலித்து வரும் ஸ்ரீ பூர்ணா புஷ்கலா சமேத ஸ்ரீ ஹரிஹரபுத்திரர் அய்யனார் சுவாமி திருக்கோயில் உள்ளது இந்த கோயிலில் ஸ்ரீ பாலவிநாயகர்,ஸ்ரீநவசக்தி,ஸ்ரீசெம்மலையப்பா,ஸ்ரீபூமாலையப்பா,ஸ்ரீபச்சையம்மன்,ஸ்ரீசெல்லியம்மன்,ஸ்ரீஆகாஷகருப்பு,ஸ்ரீகருப்பு,ஸ்ரீதொட்டியத்தார்,ஸ்ரீ பூர்ணா புஷ்கலா சமேத ஸ்ரீ ஹரிஹரபுத்திரர் அய்யனார் சுவாமி கள் புதிப்பிக்க பட்டு இப்போது 38 வருடங்கள் கழித்து கோயிலில் கடந்த ஜூன் 4ம் தேதி காலை 9 மணிக்கு மேல் ஸ்ரீ மஹாகணபதி ஹோமம்,ஸ்ரீ மஹாலட்சுமி ஹோமம்,ஸ்ரீ சுதர்சன் ஹோமம்,நவக்கிரஹ ஹோமம்,தனபூஜை ஹோம்,கோபூஜை,அஸ்வ பூஜை,கஜபூஜை,மஹா பூர்ணாஹீதி,மஹா தீபராதனை நடைபெற்று. தொடர்ந்து 11 மணிக்கு மேல் முளைபாலிகை,புனித தீர்த்த குடங்கள்,ஊர்வலம் நடைபெறற்றது தொடர்ந்து 1 மணிக்கு மேல் கோபுர கலசங்கள்,பிரதிஷ்டை நடைபெற்று சுவாமி விக்ரஹங்கள் தூய்மை செய்து அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடைபெற்றது. பின்னர் மாலை 5 மணிக்கு மேல் மங்கள இசை,வேதபாராயணம்,திருமுறைபாரணம்,ஸ்ரீ மஹா கணபதி பூஜை,புண்ணியாகவாசம்,வாஸ்து சந்தி,பிரவேசபலி,மிருத்துசங்கிராஹணம்,அங்குரார்ப்பனம்,ரஷாபந்தனம்,கலசஸ்தாபணம், கலாகர்ஷணம்,யாக சாலை பூஜை,மஹா பூர்ணாஹீதி,தீபாரதணை நடைபெற்று. அதை தொடர்ந்து 5ம் தேதி காலை மங்கள இசை, வேதபாராயணம்,திருமுறைபாராயணம்,யாக பூஜை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மேல் திரும்பவும் மங்கள இசை,வேதபாராயணம்,திருமுறைபாராயணம்,யாக சாலை பூஜை பூர்ணாஹீதி,மஹா தீபராதனை நடைபெற்றது. தொடர்ந்து 6ம் தேதி இன்று கோ பூஜை, நாடிசந்தானம்,தத்வார்ச்சனை,திரவிய ஹோமம், பூர்ணாஹீதி, நடைபெற்றது. பின்னர் தொடர்ந்து 9:30 மணிக்கு மேல் யாக சாலையில் இருந்து கும்பங்கள் புறப்பாடு நடைபெற்று காலை 10 மணிக்கு மேல் விமான கோபுரம் மஹா கும்பாபிஷேகம் மற்றும் மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது அதனை தொடர்ந்து அலங்கார பூஜை மற்றும் தீபாரதணை நடைற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனார்கள் அவர்கள் மீது புனித நீர் ஊற்ற பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் பின்னர் தொடர்ந்து அனைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது கும்பாபிஷேகம் விழாவிற்கு தேவையான அனைத்தையும் ஊர் பொதுமக்கள்,குல தெய்வ பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்

Similar News