தேர்தல் விதிமீறல் தொடர்பாக 38 புகார்கள் : ஆட்சியர்
தூத்துக்குடி தொகுதியில் மக்களவை தேர்தல் விதிமீறல் தொடர்பாக 38 புகார் மனுக்கள் பெறப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில், இந்திய தேர்தல் ஆணையத்தால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளான 16-3-2024 முதல்; தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழு மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு போன்ற குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் விதிமீறல்களை தடுத்தல், தேர்தல் செலவினங்கள் கண்காணித்தல் ஆகிய பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் தொடர்பாக வரப்பெற்ற புகார் மனுக்கள் விவரம்:C-Vigil செயலி மூலம் -14, கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் -10, வாட்ஸ்அப் செயலி மூலம் -2 மற்றும் இணையதளம் வாயிலாக - 12 என மொத்தம் இதுவரை 38 புகார் மனுக்கள் பெறப்பட்டு அவை அனைத்தும் முடிவு காணப்பட்டுள்ளன.