நாகப்பட்டினத்தில் கள்ளச்சாராயம் விற்ற 38 பேர் கைது !
நாகப்பட்டினத்தில் நடந்த அதி ரடி சோதனையில் கள்ளச்சா ராயம் விற்ற 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Update: 2024-03-18 04:48 GMT
நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் எஸ்பி ஹர்ஷ்சிங் உத்தரவின் பேரில் கள்ளச்சா ராய ஒழிப்பு வேட்டை நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்டது. இதில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 38 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 ஆயிரத்து 540 லிட்டர் புதுச்சேரி மாநில சாராயம் மற்றும் 90 மில்லி லிட்டர் அளவுள்ள 50 புதுச்சேரி மாநில மது பானம், 180 மில்லி லிட்டர் அளவுள்ள 105 மதுபானங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.