மயிலாடுதுறை சாலைகளில்  சுற்றி திரிந்த 39 மாடுகள் கோசாலையில் அடைப்பு

மயிலாடுதுறை நகர சாலைகளில்   சுற்றி திரிந்த 39 மாடுகளை கோசாலையில் அடைத்து,உரிமையாளர்களுக்கு ரூ.53 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-11-24 05:20 GMT

மாடுகளை பிடுங்கும் பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்கள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மயிலாடுதுறை நகர பகுதிகளில் சாலைகளில்   மாடுகள் சுற்றி திரிந்து  பாதசாரிகளை  அச்சுறுத்தி வருகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் நகராட்சி கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக   நகராட்சி ஆணையர் சங்கர் எச்சரிக்கை விடுத்தும் கேட்காததால் கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டும் வந்தது. மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பூக்கடை தெரு, மாப்படுகை ரோடு, கூரைநாடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரே நாளில் சாலைகளில் சுற்றி திரிந்த 39 மாடுகள் மற்றும் கன்று குட்டிகளை, நகராட்சி பணியாளர்கள் பிடித்து, கோசாலையில் அடைத்தனர்.  மாடுகளின் உரிமையாளருக்கு, தற்போது வரை 53 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News