காஞ்சிக்கு 4 துணை கலெக்டர்கள் நியமனம்

காஞ்சிபுரம் மாவட்டத்திலும், இரண்டு பணியிடங்களுக்கு புதிய அதிகாரிகளையும், இரு பணியிடங்களில் பணியாற்றிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Update: 2024-02-10 12:54 GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 

தமிழகம் முழுதும்வருவாய் நிர்வாக கமிஷனர் அலுவலகம், துணை கலெக்டர் நிலையிலான அதிகாரிகள் பலரையும் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திலும், இரண்டு பணியிடங்களுக்கு புதிய அதிகாரிகளையும், இரு பணியிடங்களில் பணியாற்றிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய அதிகாரிகள் இருவர் என, மொத்தம் 4 துணை கலெக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அந்த வகையில், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த ரம்யா இடமாற்றம் செய்யப்பட்டு, திருவண்ணாமலை பயிற்சி துணை கலெக்டரான கலைவாணி என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். அதேபோல, தேர்தல் பிரிவுக்கு, ஹிந்து சமய அறநிலையத் துறையிலிருந்து லட்சுமணன் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். பரந்துார் விமான நிலைய நில எடுப்புக்கு, சேலத்திலிருந்து, குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக காலியாக இருந்த கலெக்டரின் நேர்முக உதவியாளர் பணியிடத்திற்கு, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து யோகஜோதி என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

மேலும், நில எடுப்பு துணை கலெக்டர் ஜோதிசங்கர் இடமாற்றம் செய்யப்பட்டு, வெற்றிவேல் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

Tags:    

Similar News