ரூ.4 லட்சம் பறிமுதல்
பரமத்து வேலூர் காவிரி பாலம் அருகேயுள்ள சோதனைசாவடியில் ரூ.4 லட்சத்து 18 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-03-22 14:42 GMT
பரமத்து வேலூர் காவிரி பாலம் அருகேயுள்ள சோதனைசாவடியில் ரூ.4 லட்சத்து 18 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பரமத்திவேலூர் காவிரி பாலம் செக் போஸ்ட் அருகே பரமத்திவேலூர் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது கேரளாவில் இருந்து முட்டைகளை இறக்கிவிட்டு வேலுர் நோக்கி வந்த முட்டை லாரி ஒன்றை நிறுத்தி வேலூர் காவல் ஆய்வாளர் ரங்கசாமி மற்றும் போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.4 லட்சத்து 18 ஆயிரத்து 380-ஐ லாரி டிரைவர் திண்டமங்கலம் அருகே உள்ள பெரியகவுண்டமாபாளையத்தை சேர்ந்த நாகராஜனிடம் இருந்து பறிமுதல் செய்து பரமத்திவேலூார் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.