புள்ளிமானை வேட்டையாடிய 4 பேர் கைது
போலிபள்ளம் வனப்பகுதியில் இறைச்சிக்காக புள்ளிமானை வேட்டையாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;
Update: 2023-12-19 09:24 GMT
போலிபள்ளம் வனப்பகுதியில் இறைச்சிக்காக புள்ளிமானை வேட்டையாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பவானிசாகர் வனச்சரகத்திற்க்கு உட்பட்ட போலிபள்ளம் வனப்பகுதியில் வனகுட்டையில் தண்ணீர் குடிக்க வரும் மான்களை நைலான் வலை கொண்டு பிடித்து மான் பிடித்து அதன்பிறகு கொன்று இறைச்சியை விற்பனை செய்துவந்துள்ளனர். போலிப்ள்ளம் வனப்பகுதியில் மான் இறைச்சியை பிரித்துக்கொண்டு இருப்பதாக பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது உடனடியாக சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்ற வனத்துறையினர் , மானை இறைச்சிக்காக கொன்ற சின்னச்சாமி , சதீஷ்குமார் , வெங்கடேஷ் , கார்த்திகேயன் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து மான் இறைச்சி , நைலான் வலை ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.