கொலை வழக்கில் 2 பெண்கள் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை

களியக்காவிளை அருகே முன்விரோதம் காரணமாக கொலை செய்த நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த நிதிபதி.

Update: 2024-02-10 05:21 GMT

கொலை வழக்கில் 2 பெண்கள் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை

.கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள ஆர்சி தேர்வை சேர்ந்தவர் மணி மகன் ரஜினி (52). மீனவர். இவர்களது உறவினர்கள் அதே பகுதி  ராபர்ட், ராஜி, ராஜேஷ், குமார், ராணி, ஹெப்சி. இவர்களுக்கும் மணி குடும்பத்திற்கு இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இதில் ஏற்பட்ட தகராறில்  6 பேரும் சேர்ந்து மணியை சம்பவ தினம் தாக்கியுள்ளனர். இதில் மணி உயிரிழந்தார். இது தொடர்பாக களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தந்தையை கொலை செய்ததால் ரஜினி தங்களை பழிவாங்கி விடுவார் இந்த அச்சத்தில் கடந்த 11- 8 - 2007 ஆம் தேதி ஆறு பேரும்  சேர்ந்து ரஜினியை கட்டை, கத்தி மற்றும் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர்.  இது தொடர்பாகவும் களியக்காவிளை  போலீசார் வழக்கு பதிவு செய்து ஆறு பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போது ராபர்ட், குமார் ஆகிய  இரண்டு பேரும் இறந்து விட்டனர். மீதமுள்ள நான்கு பேருக்கும் நீதிபதி கார்த்திகேயன் நேற்று தீர்ப்பளித்தார். அவர் அளித்த தீர்ப்பில் குற்றவாளிகளான ராஜி, ராஜேஷ், ராணி, ஹெப்சி ஆகிய நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் லினஸ் ராஜ் ஆஜரானார்.
Tags:    

Similar News