கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது - 200 கிலோ கஞ்சா, 3 கார்கள் பறிமுதல்       

வேளாங்கண்ணி அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார் கடத்தி வரப்பட்ட 200 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்பட்ட 3 கார்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-07-05 05:20 GMT

பைல் படம் 

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், உத்தரவின் பேரில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று தனிப்படை காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கீழையூரை அடுத்த மேலப்பிடாகை கடைத்தெரு பகுதியில் வாகன சோதனை செய்தனர்.வாகன சோதனையின் போது கார்களில் கடத்திவரப்பட்ட 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து கீழையூர் போலீசார் வழக்கு பதிந்து  கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட திருப்பூர் பிரபாகரன் மகன்மணிராஜ் (36), புதுக்கோட்டை ராமசாமி மகன் கௌதம் (36) விழுப்புரம் கலியபெருமாள் மகன் தட்சிணாமூர்த்தி (41),விழுப்புரம் கலியபெருமாள் மகன் சிவமூர்த்தி (38) ஆகிய நான்கு நபர்களை கைது செய்தும் அவரிடமிருந்து சுமார் 200 கிலோ கஞ்சா மற்றும் 3 கார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tags:    

Similar News