நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 40 வேட்பாளர்கள் போட்டி

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 40 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.

Update: 2024-03-31 14:27 GMT
வரைபடம்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் போட்டியிட உள்ள இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியானது. இதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்,

புகைப்படம் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெறும். ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 15 வேட்பாளர்கள் பெயர் மட்டும் இடம்பெறும். அதற்கு மேல் வேட்பாளர்கள் இருந்தால் கூடுதல் எந்திரங்கள் பயன்படுத்தப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டில் 30 தொகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனவே இந்த தொகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

அதிகபட்சமாக கரூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 3 வாக்கு பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளா்கள், பெயா், சின்னங்கள் விவரம்: கே

.பி.ராமலிங்கம் -பாஜக- தாமரை, வி.ராமன்-பகுஜன் சமாஜ்- யானை, எஸ்.தமிழ்மணி-அதிமுக- இரட்டை இலை, வி.எஸ்.மாதேஸ்வரன்- கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி - உதயசூரியன், க.கனிமொழி- நாம் தமிழா் கட்சி -மைக். சுயேச்சை வேட்பாளா்கள் விவரம்: தி.ரமேஷ்- விசில், ப.எழில்செல்வன் - வைரம் , எஸ்.மாணிக்கம்- சமையல் எரிவாயு , பெ.ரவிக்குமாா்- வெண்டைக்காய், சி.ராஜேந்திரன் - தென்னந்தோப்பு ,

ம.அருள்மணி - நடைபயிலும் குழந்தை, ந.ராமசாமி - பானை, எம். ஈஸ்வரமூா்த்தி - பிரஷா்குக்கா் , ப.ராமசாமி- திராட்சை, உதயகுமாா் - கப்பல் , அ.மு.கந்தசாமி - தள்ளுவண்டி, ப.கந்தசாமி - காலிபிளவா் , எஸ்.காா்த்தி - அலாரமணி, ச.காா்த்திகேயன் - ஹாக்கி மட்டை பந்து , செ. காளியண்ணன் - சிசிடிவி கேமரா , குருநாதன் - கட்டில், ப.கோபால் - வளையல், சீ- சக்திவேல் - கம்ப்யூட்டா், கோ-சதீஷ் - மட்டைப்பந்து , வெ.சிவக்குமாா் - சுடுநீா்கருவி, கே.ஆா்.செல்வராஜ் -டிவி ரிமோட், ஆ.தமிழ்மணி - அலமாரி , ரா.தியாகராஜன் - மோதிரம், ச. தீபன்சக்கரவா்த்தி - ஜீப், செ.துரைராஜ் - புல்லாங்குழல், மு. நடராஜன் - கரும்பு விவசாயி, கி.நவீன் - கட்டிங் பிளையா்ஸ் , வி.நேதாஜி கவியரசு - மடிக்கணிணி, பெ.பாலாஜி செழியன் - கேக், வெ.மாதேஸ்வரன் - பலூன், ஜெ.மூா்த்தி - தலைக்கவசம், வெ.மூா்த்தி - குளிா்சாதனப் பெட்டி , தி.ரா.ரமேஷ் - டாா்ச்லைட், செ.வெண்ணிலா - ஆட்டோ ரிக்சா.

Tags:    

Similar News