40 அடி உயரமுள்ள கழுகு மரம் ஏறும் போட்டி
நத்தம் அருகே புதுப்பட்டியில் முத்தாலம்மன் கோயில் உற்சவ விழாவை முன்னிட்டு பக்தர்கள் அக்கினிச்சட்டி எடுத்தும், கழுமரம் ஏறியும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
Update: 2024-04-05 06:26 GMT
திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகேயுள்ள புதுப்பட்டி மற்றும் பி. குட்டூர் முத்தாலம்மன் கோயில் உற்சவ விழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த மார்ச் 20ஆம் தேதி காலையில் கரந்தமலை பெரிய அருவி செங்கழனிக்கு பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வர சென்றனர். அதைத் தொடர்ந்து 23-ஆம் தேதி மாலை முத்தாலம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மறுநாள் காலையில் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். 26-ஆம் தேதி முகூர்த்தக் கால் ஊன்றுதல் நிகழ்ச்சி நடந்தது.கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி அம்மனுக்கு மூன்றாம் நாள் சட்டம் போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று கழுமரம் வெட்டச் செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை அம்மனுக்கு பிடி மண் எடுக்கச் செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கிராமத்துக்கு பழம் மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.பின்னர் கழுமரம் ஏறும் நிகழ்ச்சியில் இளைஞர்கள் போட்டி போட்டு 40 அடி உயரமுள்ள கழுகு மரத்தை ஏறினர்.