திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 மணி அளவில் 40சதவீதம் வாக்கு பதிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகள் சுமார் 1 மணி அளவில் 40சதவீதம் வாக்கு பதிவு நடைபெற்றது.

Update: 2024-04-19 09:41 GMT

திருப்பத்தூர் மாவட்டம் இந்தியாவின் 18-வது மக்களவை தேர்தலில் இன்று முதற்கட்டமாக தமிழக முழுவதும் நடைபெற்று வருகின்றது இந்நிலையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்டபட்ட திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 537 வாக்குச்சாவடி மையகளில் 4.64.197 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

தற்போது வாக்காளர்கள் வாக்குபதிவு செய்து வருகின்றனர். மற்றும் வேலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் தொகுதிக்குட்பட்ட 508 வாக்கு சாவடி மையங்களில் 4.84.122 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதிகளில் வாக்காளர்கள் வாக்கு பதிவு செய்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகள் திருப்பத்தூர்,ஜோலார்பேட்டை, வாணியம்பாடி,ஆம்பூர், உள்ளிட்ட தொகுதிகளில் சுமார் 1 மணி அளவில் 40சதவீதம் வாக்கு பதிவு நடைபெற்று வருகின்றது.

Tags:    

Similar News