குழித்துறையில் 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் 

குழித்துறையில் சிறுசிறு மூடைகளில் கட்டி பதுக்கி வைத்திருந்த 400 கிலோ ரேஷன் அரிசியை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-01-25 06:31 GMT


குழித்துறையில் சிறுசிறு மூடைகளில் கட்டி பதுக்கி வைத்திருந்த 400 கிலோ ரேஷன் அரிசியை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் ரேஷன் அரிசிகள் கடத்தப்படுகிறது. இந்த நிலையில் நேற்று  விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அனிதா குமாரி தலைமையில்  வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார் உள்ளிட்டோர் குழித்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.   

அப்போது ஈத்த விளை பகுதியில் ஒரு தனியார் நிலத்தில் கேரளாவுக்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.       இதை அடுத்து அங்கு சென்று அதிகாரிகள் சிறுசிறு மூடைகளில் கட்டி பதுக்கி வைத்திருந்த 400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த அரிசியை காப்புக்காடு அரசு நுகர்வோர் கிடங்கியில் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News