காந்தி இலக்கியச் சங்கத்தின் 40 வது ஆண்டு விழா

மதுரை காந்தி இலக்கியச் சங்கத்தின் 40 வது ஆண்டு விழா நடந்தது.

Update: 2024-04-02 07:37 GMT

மதுரை காந்தி இலக்கியச் சங்கத்தின் 40 வது ஆண்டு விழா நடந்தது. 

தமிழ்நாடு காந்தி நினைவு நிதியின் சார்பில் காந்திய இலக்கியங்களை பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவர் இடையே கொண்டு செல்லும் வகையில் தொடங்கப்பட்ட காந்திய இலக்கிய சங்கத்தின் 40 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

நிகழ்விற்கு காந்தி காந்திய இலக்கிய சங்கத்தின் தலைவர் முனைவர் பேராசிரியர் பி. எஸ்.சந்திர பிரபு தலைமை வகித்தார். மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டாளரும் தமிழ் துறை தலைவருமான முனைவர் யாழ் சு. சந்திரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.

மதுரை பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு முதல் விற்பனையைப் பெற்றுக் கொண்டார். காந்தி நினைவு அருங்காட்சியக கல்வி அலுவலர் இரா. நடராஜன் வரவேற்றார். காந்தி இலக்கிய சங்கத்தின் பொருளாளர் நா. ராமலிங்கம் நன்றி கூறினார். நிகழ்வில் காந்திய சிந்தனை கல்லூரி முதல்வர் முனைவர் முத்துலட்சுமி, காந்திய கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதல்வர் முனைவர் இரா. தேவதாஸ், இலக்கிய சங்கப் பணியாளர்கள் காந்திய , சர்வோதய நண்பர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News