விவசாயி வீட்டில் 4.5 சவரன் நகை திருட்டு
புகலூர் அருகே உள்ள பி.காளிபாளையம் பகுதியில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 4.5 சவரன் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.;
Update: 2024-02-15 05:08 GMT
காவல் நிலையம்
கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, காட்டுமுன்னூர் அருகே உள்ள பி.காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணி வயது 59. விவசாயி. இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு, அவரது தோட்டத்திற்கு சென்றுள்ளார். தோட்டத்தில் உள்ள பணிகளை முடித்துவிட்டு மீண்டும் மாலை 5 மணி அளவில் வீடு திரும்பினார். வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 4 1/2 பவுன் தங்க நகை களவாடப்பட்டது கண்டு அதிர்ச்சடைந்தார். இதுகுறித்து க.பரமத்தி காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது கைரேகை நிபுணர்கள் சில தடயங்களை கைப்பற்றியுள்ளனர். மேலும், காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகையை களவாடிச் சென்ற மர்ம நபர் யார்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.