கடலூர் மாவட்டத்தில் 460 பேர் ஆப்சென்ட்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் 460 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.

Update: 2024-03-28 00:38 GMT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் 460 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.


தமிழகம் முழுவதும் எஸ். எஸ். எல். சி. அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை கடலூர் மாவட்டத்தில் 438 பள்ளிகளை சேர்ந்த 17 ஆயிரத்து 194 மாணவர்கள், 15 ஆயிரத்து 778 மாணவிகள் என மொத்தம் 32 ஆயிரத்து 972 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இது தவிர 7 மையங்களில் 1957 தனித்தேர்வர்கள் எழுதவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த தேர்வை 32 ஆயிரத்து 512 மாணவ- மாணவிகள் எழுதினர் 460 பேர் தேர்வு எழுத வில்லை.
Tags:    

Similar News