பைக் விபத்தில் விவசாயி பலி
விராச்சிலை அருகே பைக்கில் சென்றவர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி பலியானார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-08 04:57 GMT
கோப்பு படம்
திருமயம் தாலுகா விராச்சிலை அருகே உள்ள ரெண்டிவயலை சேர்ந்தவர் செந்தில்குமார்(48). விவசாயி. பனையப்பட்டி சாலையில் பைக்கில் சென்றார். மயானக்கரை அருகே சென்றபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளியமரதத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த குமார் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து பனையப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.