ராமநாதபுரத்தில் கடல் அட்டைகளை பிடித்த 5 பேர் கைது

மண்டபம் அருகே சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை பிடித்த 5 பேரை கைது செய்த வனத்துறையினர் அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 185 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-08 03:58 GMT

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைகளில் இருந்து கடல் அட்டை, கடல் குதிரை, திமிங்கலம் துடுப்பு உள்ளிட்ட சில அரியவகை கடல் வாழ் உயிரினங்களை பிடிக்க வனத்துறை தடை விதித்துள்ள நிலையில் கடல் அட்டைக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பும், தேவையும் இருப்பதால் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை சிலர் பிடித்து பதப்படுத்தி கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி வருகின்றனர்.

\இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள பழனிவலசை கடற்கரை பகுதியில் வனத்துறையினர் படகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விசைப்படகு ஒன்று சந்தேகத்துக்கிடமான முறையில் கடலில் சென்று கொண்டிருப்பதை கண்ட வனத்துறையினர் படகை மடக்கி பிடித்து படகில் சோதனை செய்ததில் 185 கிலோ கடல் அட்டை இருந்தது தெரியவந்தது. சட்ட விரோதமாக தடைசெய்யப்பட்ட கடல் அட்டை பிடித்த படகை கரைக்கு இழுத்து வந்து அந்த படகில் இருந்த மண்டபத்தை சேர்ந்த முகமது, முகமது அஷ்ரப், இம்மாத்தலி, வாசிம்கான், பீர்முகமது ஆகிய 5 பேரை கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டையின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News