பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் காயம்
காரின் நிலை தடுமாறி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய 5 பேர் படுகாயம்.போலீசார் விசாரணை.;
By : King 24x7 Angel
Update: 2024-02-09 09:47 GMT
பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் காயம்
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தம்மம்பட்டி அருகே உலிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன்கள் பகல்வன், சீமான், மற்றும் தாத்தா வெள்ளையன் ஆகியோர் காரில், கெங்கவல்லி அருகே 74. கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு சென்று விட்டு மீண்டும், உலிபுரத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, கூடமலை உப் பாத்து ஓடை வளைவு பகுதியில், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டி பூவாயி மீது மோதாமல் இருக்க, காரை ரவிச்சந்திரன் திருப்ப முயன்ற போது, நிலை தடுமாறி நெடுஞ்சாலையில் உள்ள 10 அடி பள் ளத்தில் கவிழ்ந்தது. விபத்தில் சிக்கிய வெள்ளையன், பகலவன், சீமான், ரவிச்சந்திரன், மூத்தாட்டி பூவாயி ஆகியோரை மீட்டனர்.பலத்தகாயம் அடைந்த வெள்ளையன் (70), பகலவன் (9) ஆகியோரை ஆத்தூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். ரவிச்சந்திரன், சீமான் மூதாட்டி பூவாயி ஆகியோர் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.