கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

மயிலாடுதுறையில் கடந்த மாதம் நடைபெற்ற கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2024-04-17 01:26 GMT

பைல் படம் 

மயிலாடுதுறை திருவிழந்தூர், ஆஞ்சநேயர் கோவில் அருகே கடந்த மாதம் 20 ஆம் தேதி இரவு மயிலாடுதுறை கலைஞர் காலணியை சேர்ந்த லோகநாதன் மகன்  அஜித்குமார் (26) மற்றும் சுப்பிரமணியன் மகன் சரவணன் (30), ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத சில நபர்கள் வழிமறித்து இருவரையும் அரிவாளால் தாக்கியதில் அஜித்குமார் சம்பவ இடத்தில் இறந்தும், அவருடன் வந்த சரவணன் என்பவருக்கு காயம் ஏற்பட்டது  இதுதொடர்பாக 21.03.2024-ம் தேதி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 10 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

மேலும் இந்த கொலை வழக்கில் ஈடுபட்ட எதிரிகள் மில்கி (எ) சந்திரமோகன் (29),  சதீஷ் (22), ஸ்ரீராம் (26), சந்திரமௌலி (24),  மோகன்தாஸ் (28), ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டதின் பேரில், அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.  கடந்த 2020 ஆம் ஆண்டு வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் கண்ணன் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப் பழியாக நடைபெற்ற கொலை சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News