குலசேகரம் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
குலசேகரம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-30 16:57 GMT
காவல் நிலையம்
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள தும்பகோடு அலெக்சாண்டர் புரம் பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக குலசேகரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீ சார் சென்றபோது அப்பகுதியில் சீட்டு விளையாடி கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளர்களான தினேஷ்,சசி, ஜெரால்டு ஷாஜின்,ராஜேஷ்,சுரேஷ் என் பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் சூதாடி வைத்திருந்த ரூ.2,380- யை பறிமுதல் செய்தனர்.