டிஎன்பிஎல் போட்டியில் 5 வீரர்கள் தேர்வு
திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து மட்டும் டிஎன்பிஎல் போட்டிக்கு 5 பேர் தேர்வு செய்யபட்டுள்ளனர்.
Update: 2024-02-09 06:49 GMT
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டிஎன்பிஎல் அணிகளின் டி20 போட்டிகள் கடந்த ஏழு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதற்கான 8வது போட்டியின் வீரர்கள் தேர்வு ஏலம் சென்னையில் நடந்தது. இதில் கோவை லைக்கா அணிக்காக முகம்மது, திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக பூபதி வைஷ்ணகுமார், ஆஷிக், இளையராஜா, திருப்பூர் தமிழன்ஸ் அணிக்காக கார்த்திக் சரண் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து மட்டும் தேர்வு செய்யபட்டுள்ளனர்.