சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 5 ஆண்டு சிறை நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-06-25 07:11 GMT

சிறை 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள எறும்புக்காடு பகுதியை  சேர்ந்தவர் சுரேஷ் (26). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கு விசாரித்த நீதிபதி சுந்தரய்யா நேற்று தீர்ப்பளித்தார். இதில் சுரேஷுக்கு 2 பிரிவுகளில்  தண்டனை அறிவிக்கப்பட்டது. போச்சோ பிரிவு 7, 8 - ன் கீழ்  3 ஆண்டு சிறை தண்டனைகள் ஆயிரம் ரூபாய் அபராதமும், பிரிவு 9, 10-ன் கீழ் 5 ஆண்டு சிறையும்,  ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டனைகளை ஏகாலத்தில் அனுமதிக்க  உத்தரவிட்டார். இதனால் சுரேசுக்கு 5 ஆண்டுகள்  தண்டனை காலமாக கருதப்படும் என அரசு வக்கீல் லிவிங்ஸ்டன் கூறினார்.

Tags:    

Similar News