இளைஞர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை: தேனி நீதிமன்றம் தீர்ப்பு.
இரண்டு இளைஞர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள தப்புக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்.
இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு தனியார் பேருந்தில் பயணம் செய்த பொழுது அதே பேருந்தில் பயணம் செய்ய சீப்பால கோட்டையைச் சேர்ந்த கருப்புசாமி மற்றும் பிச்சைமணி ஆகிய இருவரும் பேருந்தில் ஏரிய போது பேருந்தில் இருக்கைக்காக பாலமுருகனிம் வாக்குவாதம் ஏற்பட்டு மோதிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அப்பொழுது வெங்கடாசலபுரம் சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது கருப்புசாமி மற்றும் பிச்சைமணி ஆகிய இருவரும் சேர்ந்து பாலமுருகனை ஓடும் பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர். இதனால் பாலமுருகன் படுகாயம் அடைந்ததார்.
இச்சம்பவம் தொடர்பாக வீரபாண்டி காவல் நிலையத்தில் பாலமுருகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இன்று இந்த வழக்கு விசாரணை முடிவுற்று சாட்சியங்களின் அடிப்படையில் இரண்டு இளைஞர்களும் ஓடும் பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை முயற்சி செய்தது நிரூபிக்கப்பட்டதால் பிச்சைமணி, கருப்புசாமி ஆகிய இரண்டு இளைஞர்களுக்கும் ஐந்தாண்டுகள் சிறை தண்டனை Mம் மற்றும் தலா 100 ரூபாய் அபராதம் விரித்து நீதிபதி சுரேஷ் தீர்ப்பு வழங்கியுள்ளார்.