குமரியில் கூட்டுறவு நிறுவனம் பேரில்  50 கோடி மோசடி !

குமரியில் கூட்டுறவு நிறுவனம் பேரில் 50 கோடி பணம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

Update: 2024-03-07 10:34 GMT
புகார்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, நாகர்கோவில், மார்த்தாண்டம், மற்றும் களியக்காவிளை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள், இளம்பெண்கள் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் அலுவலகத்தில் தனித்தனியாக மனு அளித்தனர். அந்த மனுவில், -  மதுரையை தலைமை இடமாகக் கொண்டு சினேகா மல்டி ஸ்டேட் கோ - ஆபரேட்டிவ் ஹவுஸ் பில்டிங் சொசைட்டி என்ற பெயரில் தனியார் கூட்டுறவு நிறுவனம் சார்பில் குமரி மாவட்டத்தில் 12 இடங்களில் கிளை அலுவலகங்கள் தொடங்கப்பட்டன. இந்த அலுவலகங்களில் பல்வேறு பணிகளுக்கு பணியாளர் தேர்வு செய்யப்பட்டு  தகுதிக்கேற்ப மாதந்தோறும் 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் சம்பளம் கொடுத்தனர். பின்னர்  இது ஒன்றிய அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம் எனவே பணிக்கு சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வைப்பு தொகையாக ஒன்று முதல் இரண்டு லட்சம் வரை  கட்ட வேண்டும் என்று கூறி தொகையை பெற்றுள்ளனர்.        மேலும் எங்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்தும் வைப்பு தொகை வாங்கப்பட்டன. நாங்கள் இந்த நிறுவனத்தை நம்பி உறவினர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவரிடம் இவர்களின் வைப்பு தொகை திட்டம் தொடர்பாக விளக்கி சுமார் சுமார் 50 கோடிக்கு மேல் வரை வசூலித்தோம். தற்போது இந்த நிறுவனத்தை நடத்தியவர்கள் தலைமறைவாகி உள்ளனர் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News