மழையால சாய்ந்த 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்

ராமநாயக்கன்பாளையம் புளியந்தோப்பு பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையால் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த புளியமரம் சாய்ந்து விபத்து உண்டானது.

Update: 2024-05-25 08:10 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கனமழை மற்றும் சாரல் மழை பெய்து வரும் வழியில் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது இந்நிலையில் ராமநாயக்கன்பாளையம் புளியந்தோப்பு பகுதியில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த புளியமரம் இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வந்த காரணத்தினால் அப்பகுதியில் இருந்த புளியமரம் வேருடன் சாலை நடுவே சாய்ந்து விபத்துக்குள்ளானது அதிர்ஷ்டவசமாக அவ்வழியாக பொதுமக்கள் யாரும் செல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது தகவல் அறிந்து வந்த வருவாய் துறையினர் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
Tags:    

Similar News