செய்யாறு அரசு கல்லூரியில் ரூ.5.28 கோடியில் ஆய்வகம் - முதல்வர் திறப்பு
செய்யாறு அரசு கலைக்கல்லூரியில் ரூ.5 கோடி 28 லட்சம் மதிப்பீட்டில் புதிய 12 ஆய்வகக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.;
Update: 2024-01-23 06:30 GMT
கட்டிட திறப்பு
செய்யாறு அரசு கலைக்கல்லூரியில் தமிழ்நாடு அரசு பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் 2022-2023 மூலம் ரூபாய் 5 கோடி 28 லட்சம் மதிப்பீட்டில் புதிய 12 ஆய்வகக் கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். அதே சமயம் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி கலந்து கொண்டு பார்வையிட்டு குத்துவிளக்கு ஏற்றி பார்வையிட்டார். உடன் நகர மன்ற தலைவர் மோகனவேல்நகர கழக செயலாளர் விஸ்வநாதன் செய்யாறு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஞானவேல் நகர மன்ற துணை தலைவர் பேபிராணி பாபு ஒன்றிய குழு உறுப்பினர் மகாராஜன் நகர மன்ற உறுப்பினர்கள் ரவிக்குமார், விஜயபாஸ்கர் மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேசன் மாவட்ட தொழிலாளர் அணி துணைத்தலைவர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் ஞானமுருகன் ஒப்பந்ததாரர்கள் கதிரவன், குமரவேல் மற்றும் அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.