54 வது விளையாட்டு விழா

Update: 2024-03-09 09:46 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் 54 வது விளையாட்டு விழா 05.03.2024 அன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் திரு. S.E.A. ஜபருல்லாகான் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜனாப் V.M. ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் S. காளிதாசன் விளையாட்டு துறை ஆண்டு அறிக்கை சமர்ப்பித்து சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் M.M. முஹம்மது முஸ்தபா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், உடற்கல்வி இயக்குனர், முனைவர் R. செந்தில் குமரன், கருஞ்சுத்தி கிராமம், நம் கல்லூரி மேனாள் மாணவர்கள் திரு. R. அயூப்கான் மற்றும் திரு. M.A. ஹமீத் தாவூத் ஆகியோர் கலந்துகொண்டு நம் கல்லூரியில் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகம் சார்பில் விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக இளையான்குடி பிரமுகர் ஜனாப் S.N.S. அயூப் கான் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். இறுதியாக கல்லூரி துணைமுதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர் நன்றி கூறினார். நிகழ்வில் காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக, உடற்கல்வி ஆசிரியர், முனைவர் சரோஜா, கல்லூரி ஆட்சிக்குழு பொருளாளர் ஜனாப் S.A.M. அப்துல் அஹது, ஆட்சிக்குழு உறுப்பினர் ஜனாப் S.K.M. அப்துல் சலீம், சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் முனைவர் A. சபினுல்லாகான் உள்ளிட்ட பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவியர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News