குட்கா விற்பனை செய்த 56 கடைகளுக்கு சீல்
பெரம்பலூரர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இணைந்து சீல் வைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி பல்வேறு நடைவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி கடந்த ஒரு வார காலமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இணைந்து நடத்திய சிறப்பு ஆய்வில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 56 கடைகளுக்கு பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இணைந்து கடைகளுக்கு சீல் வைத்தனர்.
இதுபோன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும். என காவல் துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.