சேவூரில் 6 1/4 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம் !!
திருப்பூர் மாவட்டம், அவிநாசி, சேவூரில் 6 1/4 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம் போனது.;
By : King 24x7 Angel
Update: 2024-05-28 10:58 GMT

நிலக்கடலை
அவினாசி, சேவூரில் 61/4 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம். சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் 87 விவசாயிகள் 461 மூட்டைகள் நிலக்கடலை கொண்டு வந்து இருந்தனர். இதில் திருப்பூர் மற்றும் ஈரோடு சுற்று வட்டார வியாபாரிகள் கலந்து கொண்டு நிலக்கடலை குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரகம் ரூ. 6,850 முதல் ரூ 7,300 வரையிலும், இரண்டாம் ரகம் ரூ.6350 முதல் ரூ. 6800 வரையிலும், மூன்றாவது ரகம் ரூ. 5 600 முதல் ரூ. 6300 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் 6 லட்சத்து 40 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது.