6 வயது சிறுவன் 70 கணித சமன்பாடுகளை 8 நிமிடத்தில் வரைந்து சாதனை

ஆறாம் வகுப்பு மாணவர்கள் பயிலும் கணித பாடத்தில் உள்ள சமன்பாடுகள், அளவீடுகள் மற்றும் குறியீடுகளை ஆறு வயதிலேயே எழுதி மயிலாடுதுறை சிறுவன் உலக சாதனை

Update: 2024-01-28 11:54 GMT

சாதனை படைத்த சிறுவன்

 மயிலாடுதுறையை சேர்ந்த கல்யாண்குமார்-உமா மகேஸ்வரி தம்பதியினரின் மகன் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சாய்மித்ரன். கணிதத்தில் உள்ள 70 சமன்பாடுகள், அளவீடுகள் மற்றும் குறியீடுகள், வரைபடங்களை எழுதி உலக சாதனை படைத்தார்.

8 நிமிடங்கள் 10 வினாடிகளில் செவ்வகம், கனசதுரம் போன்ற அளவீடுகள், குறியீடுகள் பற்றி 2டி ஷேப் முறை, பரப்பளவு, கணிதத்தின் அடையாளங்கள், சதுரம், விட்டம் போன்ற 70 கணிதங்களை தன் அதீத திறமையால் 8 நிமிடம் 10 வினாடிகளில் 70 வார்த்தைகளை எழுதியதை நோபல் உலக சாதனை புத்தகம் உலக சாதனையாக பதிவு செய்தது.

நோபல் உலக சாதனை புத்தகத்தின் நிர்வாகிகள் சாதனை படைத்த சாய் மித்ரனுக்கு சாதனையாளர் விருது மற்றும் கேடயங்களை வழங்கினார். சாதனை மாணவருக்கு வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் சேவை அமைப்பினர் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News