செல்லாண்டி பாளையத்தில் ஆறு பேர் கைது
செல்லாண்டி பாளையத்தில் பணம் வைத்த சூதாடிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பணம் வைத்து சூதாடுவதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சக்திவேலுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மே 26 ஆம் தேதி, மதியம் ஒரு மணி அளவில், அருகில் உள்ள செல்லாண்டிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அருகில் உள்ள முள்தோட்டத்தில் பணம் வைத்த சூதாடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட பள்ளபாளையம், தெற்கு தெருவை சேர்ந்த துரைசாமி, கிழக்கு தெருவை சேர்ந்த தங்கராஜ், அஜித் குமார், கரூர் திருமாநிலையூரை சேர்ந்த ஆனந்த், சின்ன தாராபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த துரைமுருகன், வாய்க்கால் தோட்டத்தைச் சேர்ந்த முருகன் உள்ளிட்ட ஆறு பேரையும் கைது செய்தனர்.
சூதாட பயன்படுத்திய சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 300-யும் பறிமுதல் செய்த காவல்துறையினர், ஆறு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, பின்னர் அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் சின்ன தாராபுரம் காவல்துறையினர்.