6ஆயிரம் லிட்டா் கலப்பட டீசல் பறிமுதல் : 2பேர் கைது
தூத்துக்குடி அருகே 6 ஆயிரம் லிட்டா் கலப்பட டீசலை கடத்தி வந்தது தொடர்பாக 2பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ;
Update: 2024-02-21 05:51 GMT
கைது
தூத்துக்குடி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகேயன் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி எப்போதும்வென்றான் பகுதியில் ரோந்து பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தனா். அப்போது, குமரரெட்டியாபுரம் செல்லும் சாலையில் உள்ள பாழடைந்த கருவாட்டு கிட்டங்கி அருகே சந்தேகப்படும்படியாக வந்த இரண்டு சரக்கு வாகனங்களை மடக்கி சோதனை செய்தனா். அதில், 40 பிளாஸ்டிக் பேரல்களில் தலா 150 லிட்டா் வீதம் மொத்தம் சுமாா் 6 ஆயிரம் லிட்டா் கலப்பட டீசல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வாகனத்தின் ஓட்டுநா்கள் சாத்தான்குளத்தைச் சோ்ந்த ஹாஜா மகன் மஹதூம் (37), புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சோ்ந்த காதா் சாஹிபு மகன் ரஹ்மான் கான்(36) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், கலப்பட டீசலை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலுள்ள மீனவா்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தியதாக தெரிவித்தனா். இதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவா்களிடமிருந்து சுமாா் 6 ஆயிரம் லிட்டா் கலப்பட டீசலையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.