கோவிலில் திருடிய வாலிபருக்கு 6 ஆண்டு சிறை
கோவிலில் திருடிய வாலிபருக்கு 6 ஆண்டு சிறை என இரணியல் கோர்ட் தீர்ப்பு.;
Update: 2024-03-17 05:24 GMT
கைது
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே கிள்ளியூர் பகுதியில் அமைந்துள்ள அம்மன் கோவில் கடந்த வருடம் பூட்டை உடைத்து உண்டியல் பணம், விளக்கு, மணி உள்ளிட்டவை திருட்டு போனது. இது சம்பந்தமாக கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலகிருஷ்ணன் புதூர் பகுதியை சேர்ந்த அன்பரசன் (29) என்பவரை கைது செய்து இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அன்பரசனுக்கு இரணியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்காததால் 8 மாதமாக சிறையிலேயே உள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இரணியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் நீதிபதி அமர்தீன் திருட்டு வழக்கில் அன்பரசனுக்கு ஆறு வருட சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.