60,000 ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகும் அவலம்
பெரிய கோட்டை அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கேட் வால்வு பழுதால் 60,000 லிட்டர் குடிநீர் வீணாக திறந்து விடப்பட்டது.
Update: 2024-01-12 06:53 GMT
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் பெரிய கோட்டை அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கேட் வால்வு பழுதால் 60,000 லிட்டர் குடிநீர் வீணாக திறந்து விடப்பட்டது. ஊராட்சி பில்லமநாயக்கன்பட்டி 6வது வார்டு பகுதியில் பெருமாள் கோவில் அருகே அமைந்துள்ள 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் நீர் திறந்து விடக்கூடிய கேட் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து அதனை சரி செய்துள்ளனர். பின்னர் மீண்டும் நேற்று காலை 11 மணியளவில் அதே பிரச்சினை ஏற்பட்டதால் தொட்டியில் இருந்த 60 ஆயிரம் லிட்டர் தண்ணீரும் தற்பொழுது திறந்து விடப்பட்டு வீணடிக்கப்பட்டு வருகிறது. பொது மக்களுக்கு குடிநீர் பல ஊர்களிலும் கிடைக்காமல் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் குடிநீரை வீணடிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.