தர்பூசணி வியாபாரியிடம் 61 ஆயிரம் பறிமுதல்
ஊத்தங்கரை அருகே தேர்தல் பறக்கும் படையினர் தர்பூசணி வியாபாரியிடம் 61 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.
Update: 2024-04-05 13:40 GMT
ஊத்தங்கரை அருகே தர்பூசணி வியாபாரியிடம் 61 ஆயிரம் பறிமுதல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் உதவி வேளாண்மை அலுவலர் செல்வராஜ் தலைமையிலான தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கை ஈடுபட்டிருந்த போது ஊத்தங்கரை நோக்கி வந்த வண்டியை நிறுத்தி சோதனை நடத்திய போது வண்டியில் இருந்த பெங்களூர் கெங்கேரி பகுதியைச் சேர்ந்த தர்பூசணி வியாபாரி இர்ஃபானிடம் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த 61 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்து ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது