கும்பகோணம் அருகே ரூ.62 ஆயிரம் பறிமுதல்

கும்பகோணம் அருகே நிலை கண்காணிப்பு குழுவினர் நடத்திய வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.62 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-04-15 07:43 GMT
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் சுவாமிமலை மெயின் ரோடு திம்மகுடி பகுதியில் நிலையான கண்காணிப்பு குழு 2 ஆய்வு மேற்கொண்டிருந்த போது தாராசுரம், வளையப்பேட்டையைச் சேர்ந்த  சுபாஷ் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்திலிருந்து ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய். 62,310 கைப்பற்றபட்டது. பின்னர்  இந்த தொகையை சார் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கபட்டது.
Tags:    

Similar News