பெரம்பலூர் மாவட்டத்தில் 67 சவரன் நகைகள் மீட்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு 67 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் பேருந்தில் இருந்து இறங்கிய திருக்கோவிலூரைச் சேர்ந்த கோமதி (63) என்பவர் தனது நகைகளை காணவில்லை என்று காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பேருந்துகளில் நடந்த பல்வேறு நகை திருட்டு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் உதவி ஆய்வாளர் சரவணன் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சங்கர் ஆரோக்கியராஜ் தலைமைக் காவலர் அலெக்ஸ் முதல் நிலைக் .காவலர் கிருஷ்ணகுமார் ஆகியோர்களைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு நகர மற்றும் விரைவு பேருந்துகளில் தொடர்ச்சியாக சோதனை செய்து திருட்டு குற்ற சம்பவங்கள் தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களை தொடர்ச்சியாக ஆய்வு செய்ததில்,
குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது 4 பேர் கொண்ட கும்பல் என்பது தெரியவந்தது, இதனைத் தொடர்ந்து அவர்களை பிடிப்பதற்காக பல்வேறுகட்ட நடவடிக்கைகள் எடுத்து திருட்டு கும்பலின் தலைவராக செயல்பட்ட சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரி வட்டம் பொன்னடம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்லையா மகன் கார்த்திக் வயது 34 என்பவரை கைது செய்து விசாரணை .
அவரிடமிருந்துசுமார் 67 சவரன் நகைகள் மீட்கப்பட்டு நகைகளை நீதிமன்றம் மூலம் உரிய நபர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது, மேலும் மற்ற குற்றவாளிகளை கைது செய்ய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.