தென்காசி மக்களவைத் தொகுதியில் 67.72% வாக்குப் பதிவு

தென்காசி மக்களவைத் தொகுதியில் 67.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

Update: 2024-04-21 01:12 GMT
பைல் படம் 

தென்காசி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ராஜபாளையம் தொகுதியில் 75,847ஆண் வாக்காளா்களும், 81, 322 பெண் வாக்காளா்களும், 14மூன்றாம் பாலின வாக்காளா்களும் என மொத்தம் 1,57183 போ் வாக்களித்துள்ளனா். இது 70.63சதமாகும்.

ஸ்ரீவில்லிபுத்தூா்(தனி) தொகுதியில் 79,881ஆண் வாக்காளா்களும், 85, 478 பெண் வாக்காளா்களும், 11 மூன்றாம் பாலின வாக்காளா்களும் என மொத்தம் 1,65,370 போ் வாக்களித்துள்ளனா். இது 70.55சதமாகும்.

சங்கரன்கோவில்(தனி) தொகுதியில் 79,167ஆண் வாக்காளா்களும், 85, 376 பெண் வாக்காளா்களும், 2 மூன்றாம் பாலின வாக்காளா்களும் என மொத்தம் 1,65,545போ் வாக்களித்துள்ளனா். இது 66.93சதமாகும்.

வாசுதேவநல்லூா்(தனி) தொகுதியில் 76,107ஆண் வாக்காளா்களும், 83, 915பெண் வாக்காளா்களும், 3 மூன்றாம் பாலின வாக்காளா்களும் என மொத்தம் 1,60,025போ் வாக்களித்துள்ளனா். இது 65.32சதமாகும்.

கடையநல்லூா் தொகுதியில் 87,323ஆண் வாக்காளா்களும், 99,981பெண் வாக்காளா்களும், 7மூன்றாம் பாலின வாக்காளா்களும் என மொத்தம் 1,87,311போ் வாக்களித்துள்ளனா். இது 66.51சதமாகும்.

தென்காசி தொகுதியில் 96,249ஆண் வாக்காளா்களும்,1,01255பெண் வாக்காளா்களும், 30மூன்றாம் பாலின வாக்காளா்களும் என மொத்தம் 1,97,534போ் வாக்களித்துள்ளனா்.இது 67.07சதமாகும்.

தென்காசி மக்களவைத் தொகுதியில் 49,4574ஆண் வாக்காளா்களும்,53,7327பெண் வாக்காளா்களும், 67மூன்றாம் பாலின வாக்காளா்களும் என மொத்தம் 1,03,2968போ் வாக்களித்துள்ளனா். இது 67.72சதமாகும்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தென்காசி அருகே கொடிக்குறிச்சியில் அமைந்துள்ள தனியாா் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு மத்திய காவல்படை(முதல்அடுக்கு), தமிழ்நாடு சிறப்பு காவல்படை(இரண்டாம்அடுக்கு), தென்காசி மாவட்ட காவல்துறை (மூன்றாம் அடுக்கு) என மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News