சேரன்மகாதேவி கோவிலில் 69வது ஆண்டு பால்குட விழா
திருநெல்வேலி மாவட்டம்,சேரன்மகாதேவியில் உள்ள சாட்டுப்பால் விநாயகர் ஆலையத்தில் நடைபெற்ற பால்குட ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Update: 2024-02-10 01:35 GMT
நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகே உள்ள சாட்டுப்பால விநாயகர் கோயில் 69வது ஆண்டு பால்குட விழா நேற்று நடைபெற்றது. காலை 9 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்த பால்குட ஊர்வலம் கோயிலில் முடிந்தது. பின்னர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சேரன்மகாதேவி தொழில் வர்த்தக சங்கத்தினர் செய்திருந்தனர்.