வீடு கட்டி தர வேண்டுமென 6ம் வகுப்பு சிறுமி கோரிக்கை!

திருப்பூர், பெரியாயிபட்டி பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமி வீடு கட்டி தர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

Update: 2024-05-11 06:54 GMT

திருப்பூர், பெரியாயிபட்டி பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமி வீடு கட்டி தர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

ஓட்டை வீடு ஒழுகுது, பாத்ரூம் ஓட்டையா இருக்கு, கரண்ட் வசதி இல்லை’ எங்களுக்கு வீடு, கழிப்பிடம் கட்டித்தர வேண்டும் என்ற ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமியின் கோரிக்கை மனதை நெகிழச் செய்வதாக இருக்கிறது.

பாதி மண்ணால் கட்டப்பட்ட வீட்டில், மீதி பக்கவாட்டில் ஓலை வேயப்பட்டு ஓட்டையும் உடைசலுமாக காட்சியளிக்கிறது ஒரு குடிசை. ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் காலத்தில் மின்சார வசதி கூட இல்லாமல் அவதிப்படுகிறது திருப்பூரை சேர்ந்த ஒரு குடும்பம் திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம், கண்டியன் கோயில் அருகே  உள்ள பெரியாயிபட்டி, பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே உள்ள ஏ.டி காலனியை சேர்ந்தவர் 60 வயதான கூலித்தொழிலாளி பழனிசாமி-&லதா தம்பதியருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

பழனிசாமி பக்கவாதத்தால் அவதிப் படுகிறார். தனது பெரிய மகளுடன் திருப்பூரில் வசிக்கும் நிலையில், லதா 2 மகள்கள் மற்றும் 3 வயது மகனுடன் குடிசை வீட்டில் வசிக்கிறார். 11 வயதான இளைய மகள்  வைஷ்ணவி கண்டியன் கோவில் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் நிலையில், பிய்ந்து போன குடிசை வீட்டில் மிகவும் ஏழ்மை நிலையில் வசிக்கிறார்கள்.மழை பெய்தால் ஒழுகும் தகரம் வேயப்பட்ட குடிசை, வெறும் தென்னை ஓலைகளை வைத்து கட்டப்பட்ட இடுப்பு உயரம் மட்டுமே உள்ள கழிப்பறை என இவர்கள் பல கஷ்டங்களுக்கு இடையில் வசித்து வருகிறார்கள். ஆறாம் வகுப்பு படிக்கும் வைஷ்ணவியும், 17 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட மகள் வளர்மதியும் கழிப்பறை வசதி இல்லாமல் தவிக்கிறார்கள்.

படிப்பதற்கு விளக்கு இல்லை, எங்கள் வீட்டுக்கு மின்வசதி வேண்டும். ஓட்டை வீடு ஒழுகுகிறது, வீட்டுக்குள் பாம்பு, பூச்சி எல்லாம் வருகிறது. கழிப்பறையும் ஓட்டையாக இருக்கிறது. எங்களுக்கு மின்சாரம், கழிப்பறை, வீடு கட்டித்தர வேண்டும் என்று சொல்லத்தெரியாமல் வைஷ்ணவி சொல்வது மனதை அழுத்துகிறது. அரசு இவர்களுக்கு வீடு, மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் என்பது இவர்கள் கோரிக்கை மட்டுமல்ல,  இந்த ஊர் பொதுமக்கள் அனைவரின் கோரிக்கையும் தான்.

Tags:    

Similar News