7 ஏக்கர் தரிசு நிலத்தை மாவட்ட நிர்வாகம் அரசு புறம்போக்கு நிலமாக மாற்றியதற்கு எதிர்ப்பு

7 ஏக்கர் தரிசு நிலத்தை மாவட்ட நிர்வாகம் அரசு புறம்போக்கு நிலமாக மாற்றியதற்கு எதிர்ப்பு

Update: 2024-08-27 14:17 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருதுநகர் மாவட்டம் சாணார்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் உள்ள 7 ஏக்கர் தரிசு நிலத்தை மாவட்ட நிர்வாகம் அரசு புறம்போக்கு நிலமாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கிராமத்தைச் சேர்ந்த 300க்கு மேற்பட்டோர் இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு ... விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட காளையார்குறிச்சிப் பஞ்சாயத்துக்குட்பட்ட சாணார்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் . இந்த நிலையில் இந்த கிராமத்திற்கு சொந்தமான சுமார் 7 ஏக்கர் தரிசு நிலம் இருந்துள்ளது. இந்த தரிசு நிலத்தை மாவட்ட நிர்வாகம் கிராம மக்களுக்கு தெரிவிக்காமல் அரசு புறம்போக்கு நிலமாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ,. மேலும் தங்கள் கிராமத்தில், சமுதாயக் கூடம், கழிப்பறை வசதி உள்ளிட்ட எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாத சமயத்தில் இந்த தரிசு நிலத்தை மாவட்ட நிர்வாகம் அரசு புறம்போக்கு நிலமாக மாற்றியதை ரத்து செய்து, அந்த தரிசு நிலத்தில் தங்கள் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கம் வேண்டும், என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்த கிராமத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்

Similar News