ஒசூர்:ரூ.7 ஆயிரம் லஞ்சம் மின்வாரிய வணிக ஆய்வாளருக்கு காப்பு.

ஒசூர்:ரூ.7 ஆயிரம் லஞ்சம் மின்வாரிய வணிக ஆய்வாளருக்கு காப்பு.;

Update: 2025-04-24 01:17 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்துள்ள இருதுகோட்டை பகுதியை சோ்ந்தவா் விவசாயி முனிகிருஷ்ணன். இவா் தனது நிலத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றுக்கு பூந்தோட்ட மின் இணைப்பு கேட்டு, மின் இணைப்பு வழங்கக் கோரி தேன்கனிக்கோட்டை தெற்கு உதவி மின் பொறியாளா் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். இதற்கு வணிக ஆய்வாளர் தனபால் (52) இவர் மின் இணைப்பு வழங்க ரூ. 7000 லஞ்சம் முனிகிருஷ்ணனிடம் கேட்டூள்ளார். இதுகுறித்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் நாகராஜனிடம் புகார்கொடுத்தார்.பின்னா் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அளித்த முனிகிருஷ்ணன் ரசாயனம் தடவிய 7000 ரூபாயை வணிக ஆய்வாளா் தனபாலனிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த துணைக் கண்காணிப்பாளா் நாகராஜன் தலைமையிலான போலீசார் வணிக ஆய்வாளா் தனபாலை பிடித்து கைது செய்தனா்.

Similar News