சேலத்தில் 7 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்

சேலத்தில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையின் போது உரிய ஆவணங்களின்றி மொபட்டில் எடுத்து சென்ற 7 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-04-02 05:31 GMT

பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி கொலுசுகள் 

சேலம் நெத்திமேடு ஜங்ஷன் பகுதியில் நேற்று மாலை பறக்கும் படை அதிகாரியான தலைவாசல் வேளாண் துறை உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்தவரை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் மொபட்டில் 7 கிலோ எடை கொண்ட வெள்ளி கொலுசுக்கு தேவையான முத்து மற்றும் கொக்கி போன்ற வெள்ளி பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 71 ஆயிரம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மொபட்டை ஓட்டி வந்த சங்ககிரி அருகே உள்ள கணபதி நகரை சேர்ந்த குமார் என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அவர் சங்ககிரியில் இருந்து சேலத்துக்கு வெள்ளி பொருட்களை மொபட்டில் எடுத்து சென்றது தெரியவந்தது. மேலும் இந்த பொருட்களுக்கு உரிய ஆவணம் இல்லாததால் அந்த வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்து தெற்கு சட்டசபை தொகுதி உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News