7 லட்சம் ரூபாய் பறிமுதல்

விருதுநகரில் எல் ஐ சி முகவர் உள்பட இரண்டு பேரிடம் 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-04-01 01:48 GMT
எல் ஐ சி முகவர் உள்பட இரண்டு பேரிடம் 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19 ம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வந்து உள்ளது. இந்த நிலையில் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு உள்ளிட்ட 7 வாகனங்களில் தேர்தல் அலுவலர்கள் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சாத்தூர் அருகே ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் வாகனத் தணிக்கையில் வெம்பக்கோட்டை வட்டார புள்ளியியல் ஆய்வாளர் உமாமகேஸ்வரி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சாத்தூர் சிதம்பரம் நகரை சேர்ந்த எல் ஐ சி முகவரான காமராஜ் என்பவரின் இரு சக்கர வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர் அப்போது உரிய ஆவணம் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் சாத்தூர் அருகே தூங்கா ரெட்டி பட்டி கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே சாத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கற்பகம் தலைமை யிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த எலும்மிச்சங்காய்பட்டியை சேர்ந்த மகேந்திரகுமார் என்பவரின் இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது அதில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இரண்டு இடங்களில் பறிமுதல் செய்த படத்தை சாத்தூர் கோட்டாட்சியர் சிவக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News